நாடாளுமன்றத்தில் இச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டு சுமார் நான்கு ஆண்டுகளின் பின்னர், நாடாளுமன்றின் மீன்வளத்துறை பிரிவினால் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமிங்கிலம் மற்றும் டொல்பின்களை பிடித்து இனப்பெருக்கம் செய்வது பாரிய குற்றமாகும் என இச்சட்டமூலத்தில் குறிப்படப்பட்டிருந்தது.
இந்நிலையில், இச்சட்டமூலம் எவ்வித திருத்தங்களும் இன்றி லிபரல் மற்றும் புதிய ஜனநாயக கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்;டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் பூங்காக்கள், மீன் அருங்காட்சியங்கள் போன்றவை இந்த சட்டத்தை மீறி செயற்படும் பட்சத்தில் 2 இலட்சம் அமெரிக்க டொலர் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.