உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த தேவாலயங்களை வழமை நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிதியுதவி வழங்க விருப்பமுள்ள நபர்களுக்காக விசேட வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
குறித்த வங்கிக்கணக்கு கொழும்பு கொமர்ஷல் வங்கி கிளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த கணக்கு கொழும்பு பேராயரின் பெயரில் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிதி வழங்க விருப்பமுள்ளவர்களுக்காக கணக்கிலக்கம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி பொரளை கொமர்ஷல் வங்கி கிளையின் 1190038741 என்ற கணக்கு இலக்கத்தின் கீழ் நன்கொடையை வைப்பிலிட முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.