கணேமுல்லையில் உள்ள கமான்டோ ரெஜிமன்ட் தலைமையகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் இதுவரை காலமும் கட்டளை தளபதியாக கடமையாற்றும் கஜபா ரெஜிமன்ட்டுக்கு மேலாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர். அவரது கட்டுப்பாட்டில் இருந்த படையினர், அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை மீறினார்கள் என்று, ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையிலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையிலும், குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
இதேவேளை சவேந்திர சில்வாவிற்கு இலங்கை இராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.