ஜம்மு காஷ்மீர் மாநிலம், அவந்திபோரா பகுதியில் அமைந்துள்ள இந்திய விமானப்படை முகாமிலிருந்து இன்று (வியாழக்கிழமை) விமானப்படை வீரர்கள் வாகனம் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது குறித்த வாகனம் விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த 2 விமானப்படை வீரர்கள் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வாகன விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.