பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக வாழைத்தோட்டம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 38 வயதுடைய குறித்த நபர் இவர் அப் பகுதியிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பொன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அவரிடமிருந்து தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் சுவரொட்டிகள், போதனைகள் அடங்கிய USB ஃபிளாஷ் டிரைவ்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.