கப்பட்டவர்களுக்கான தூக்குத் தண்டனையை எதிர்வரும் மே மாதத்துக்குள் நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.
அதன்பிரகாரம் போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்துடன் தொடர்புபட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட 4 பேருக்கு ஆரம்பத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகம் பரவலாக அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில், இதனோடு தொடர்புபட்ட கடுமையான குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இதனிடையே, இந்த மரண தண்டனை விடயத்தை மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச அமைப்புக்கள் மீள் பரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளன.
இவ்விடயத்தில், சிறுபான்மையினர், வலுவான சமூக, பொருளாதாரப் பின்னணி அற்றவர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.