ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பிணை வழங்கக் கோரி, டெல்லி குற்றப்புலனாய்வு நீதிமன்றத்தில் கிறிஸ்டியன் மைக்கேல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு, சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது குறித்த பிணை மனுவுக்கு, அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிணை மனுவை நிராகரித்துள்ளது.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கில் கிறிஸ்டியன் மைக்கேலை சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவு கைது செய்து, தொடர் விசாரணையை அவரிடம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.