நயினாதீவில் நேற்று (திங்கட்கிழமை) கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது , முஸ்லீம் மதத்துடன் தொடர்புடைய இறுவெட்டுகள் வைத்திருந்தமை, மதம் சார்ந்த புத்தகங்கள் மற்றும் அரபு மொழி புத்தகங்கள் என்பவற்றை வைத்திருந்த குற்றசாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை வேலணை மண்கும்பான் பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் விசாரணைக்காக பின்னர் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் ஊர்காவற்துறை பொலிஸார் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.