கனடாவின் எட்மன்டன், ஒன்ராறியோ உள்ளிட்ட சிலபகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பூங்காக்கள் மற்றும் இரவு விடுதிகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ள நிலையில், கார்களிலிருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நாட்டின் இருவேறு பகுதிகளில் ஒரே மாதிரியான கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.