விஜயன் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வெளியிடப்படவிருந்த நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பான புத்தகம் ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.
இப்புத்தக வளியீடுக்காக பூந்தல்லியில் இருந்து தேனாம்பேட்டை புத்தக கடைக்கு கொண்டுசெல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருப்பதால், புத்தகத்தை வெளியிட, ஆயிரம் விளக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரி எஸ்.கணேஷ் தடை விதித்துள்ளார். மேலும் இப்புத்தகத்தை உத்தரவையும் மீறி வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.