வெறும் நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி ஆட்சியை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுத்து அதில் நெருக்கடியை சந்தித்த நேரத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக இல்லாது மஹிந்த தரப்பினர் ஜனாதிபதியின் முதுகில் குத்தினார்கள் என அவர் தெரிவித்தார்.
இந்த மனக் கசப்புகளுடனே அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் அமர்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) கட்சித் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவு இருக்கும் வரையில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது எனத் தெரிவித்த அவர், ஜனாதிபதியைக் காப்பாற்றவே வரவு செலவுத் திட்டத்தை தாம் எதிர்க்கவில்லை எனவும் கூறினார்.