உலகப் பெருங்கவியாக அறியப்பட்ட பிரமிள்
என்கின்ற தர்மு சிவராமுக்கு இன்று 80 வது பிறந்த தினம்.
(20-04-1939 - 20-04-2019)
அவரது அமுத விழாவை சிறப்பிக்கும் முகமாக நாளை 21-04-2019 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு திருகோணமலை சன்சைண் ஹோட்டலில் " பிரமிள் விருது விழாவும் பிரமிள் நினைவுப் பேருரையும்" நடை பெறவுள்ளது.
அனைவரும் வருக
உலகப் புகழ் எம் மண்ணின் கவியின் விழா சிறக்க
நான்
=====
" ஆரீன்றாள் என்னை ?
பாரீன்று பாரிடத்தே
ஊரீன்று உயிர்குலத்தின்
வேரீன்று வெறும் வெளியில்
ஒன்று மற்ற பாழ் நிறைத்து
உருளுகின்ற கோளமெலாம்
அன்று பெற்று விட்டவளென் தாய்
வீடெதுவோ எந்தனுக்கு
ஆடும் அரன் தீ விழியால்
மூடியெரித் துயிரறுத்த
காடு ஒத்துப் பேய்களன்றி
ஆருமற்ற சூனியமாய்
தளமற்ற பெரு வெளியாய்
கூரையற்று நிற்பது உன் இல்
யாரோ நான்?-ஓ!ஓ!
யாரோ நான் என்பதற்கு
குரல் மண்டிப் போனதென்ன?
தேறாத சிந்தனையும்
மூளாது விட்டதென்ன?
மறந்த பதில் தேடியின்னும்
இருள் முனகும் பாதையிலே
பிறந்திறந்து ஓடுவதோ
நான்?
பிரமிள். 1960