LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, April 5, 2019

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு

தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான போட்டியில் வெற்றியீட்டிய ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

IMS சர்வதேச ஊடக அமைப்பும் யாழ். ஊடக அமையமும் இணைந்து நடத்திய இந்த போட்டியின் இன்றைய விருது வழங்கும் நிகழ்வில் வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

IMS சர்வதேச ஊடக அமைப்பும் யாழ். ஊடக அமையமும் இணைந்து தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் வட. மாகாணத்தில் 5 மாவட்டங்களையும் சேர்ந்த 30 ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியை நடத்தியது.

இந்த பயிற்சியின் அடுத்த கட்டமாக பயிற்சியில் கலந்துகொண்ட 30 ஊடகவியலாளர்களுக்கிடையில் தகவலறியும் உரிமைச் சட்டத்தை பிரயோகித்து செய்திகள், ஆக்கங்களை எழுதும் போட்டி ஒன்றினையும் நடத்தியது. இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற ஊடகவியலாளர்களுக்கே இன்று விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கு.செல்வகுமார், அ.யசீகரன், எஸ்.குமணன் ஆகிய 3 ஊடகவியலாளர்கள் விருதுகளைப் பெற்றனர். இந்நிகழ்வில் வட. மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கலந்துகொண்டிருந்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7