லைத்தாண்டிய வர்த்தகத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
காஷ்மீர்- பாரமுல்லா, உரியிலுள்ள சலமாபாத், பூஞ்ச் சக்கான் டா-பாக் ஆகிய பகுதிகளில் வாரத்துக்கு 4 நாட்கள் இந்த வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்நிலையிலேயே எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு இந்தியா தற்போது தடை விதித்துள்ளது.
இவ்விடயம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, எல்லை தாண்டிய வர்த்தகத்தை பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் சில சக்திகள் தவறாகப் பயன்படுத்துகின்றன.
அதாவது, சட்டவிரோதமாக ஆயுதங்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை பாகிஸ்தானிலிருந்து கடத்தி வருகின்றனர்.
ஆகவே, இத்தகைய செயற்பாட்டை தடுப்பதற்காக சலமாபாத், சக்கான் டா- பாக் ஆகிய இடங்களில் நடைபெறும் எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதென மத்திய அரசு அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, பிற நாடுகளுடனான உறவில் விரிசலை ஏற்படுத்துமென காஷ்மீர் அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.