ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சூஷென் மோகன் குப்தாவுக்கு பிணை வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் சூஷென் மோகன் குப்தாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் காலவதியாவதுடன் இதற்கு தனியான உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆகவே அவருக்கு பிணை வழங்க முடியாதென கூறிய சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், அவ்வழக்கின் மனுவையும் இன்று (சனிக்கிழமை) தள்ளுபடி செய்துள்ளார்.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சூஷென் மோகன் குப்தாவை அமலாக்கத்துறை கடந்த வியாழக்கிழமை கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கது.