அத்துடன் ஏனையோரில் சிறுவர்கள் இருவரை விடுதலை செய்யுமாறும் மிகுதி ஏழு பேரை பிணையில் விடுதலை செய்யுமாறும் புத்தளம் மாவட்ட நீதவான் அனுர இந்திரஜித் புத்ததாஸ உத்தரவிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக பிரான்ஸூக்கு செல்லும் நோக்குடன் வாகனத்தில் உடப்பிற்குச் சென்று கொண்டிருந்த குறித்த 11 பேரும் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் கைதுசெய்யப்பட்டு இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதனிடையே, இந்த விடயம் இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பெண்ணொருவர், இரு சிறுவர்கள் உள்ளிட்ட பதினொரு பேரில் முதலாம் மற்றும் 8 ஆம் சந்தேக நபர்களை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன் ஏனைய எட்டுப் பேரில் 10 வயது சிறுவன், 12 வயது சிறுமி ஆகிய இருவரை விடுதலை செய்யுமாறும் ஏனைய ஏழு பேரையும் பிணையில் விடுவிக்குமாறும் அவர் உத்தரவு விட்டார்.