LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, April 2, 2019

இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!

பிரபல இயக்குநர் மகேந்திரனின் மறைவு பேரிழப்பு என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு பிரமுகர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ் திரையுலக இயக்குநர்களில் கதாநாயகராக விளங்கிய பிரபல இயக்குநர் மகேந்திரன் தனது 79 வயதில் சென்னையில் மறைந்து விட்டார் என்ற சோகச்செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்குள்ளானேன்.  அவரது மறைவிற்கு தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.

வாழ்நாள் முழுவதும் எளிமைக்கு இலக்கணமாக விளங்கிய அவர் ஒரு ‘யதார்த்த சினிமா இயக்குநர்’ என்று திரையுலகில் இமயத்திற்கு நிகரான பெயரைப் பெற்றவர்.

தமிழ் உலகின் தலைசிறந்த கதாநாயகர்களுக்கு எல்லாம் திரைக்கதை வசனம் எழுதி தனி முத்திரை பதித்தவர். மகேந்திரன் கதை வசனம் எழுதி, இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘முள்ளும் மலரும்’ திரைப்படம் இன்றைக்கும்  அண்ணன்- தங்கை பாசத்திற்கு அடையாளமாகும்.

அழகப்பா கல்லூரியில் படித்த காலத்திலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தி மாணவர்கள் மத்தியில் பிரபலமானவர். இளம் இயக்குநர்களுக்கு எல்லாம் மிகச் சிறந்த உதாரணமாகவும் எதிர்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

பத்திரிகையாசிரியர், திரைப்பட வசன கர்த்தா, இயக்குநர், நடிகர் என்று பன்முகத்திறமை கொண்ட அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகிற்கும் தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7