மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ரொறன்ரோவைச் சேர்ந்த 21 வயது ஆண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணை ஒன்றின் ஒருபகுதியாக, பாத்ரூஸ்ட் வீதி மற்றும் ஷெப்பார்ட் அவென்யூ வெஸ்ட் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், திங்கட்கிழமை இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தேடுதலின்போது குறித்த அந்த வீட்டினுள் இருந்து ISCC MK.22 calibre “SCAR” தாக்குதல்வகை துப்பாக்கி, சிறிது மாற்றியமைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் நீளம் குறைக்கப்பட்டு, அதன் தொடர் இலக்கமும் மாற்றப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனுடன் அந்த துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் முப்பது தோட்டாக்களும், சிவப்புநிற மின்அதிர்வுத் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு கைதுசெய்யப்பட்ட நபர் மீது தடைசெய்யப்பட்ட சாதனத்தினை வைத்திருந்தமை, துப்பாக்கியை கவனயீனமாக வைத்திருந்தமை, தொடர் இலக்கம் மாற்றப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தமை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.