சேவையாற்றவில்ல. மாறாக அவர்களின் நலன்களுக்காகவே சேவையாற்றுகின்றதென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம், அராரியா பகுதியில் நேற்று (சனிக்கிழமை) தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடும்போதே, நரேந்திர மோடி இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற பல பயங்கரவாத தாக்குதலை கூட வாக்குக்காக, இந்து பயங்கரவாதம் என்ற பெயரில் விசாரணையை காங்கிரஸ் அரசு திசை திருப்பியதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் பா.ஜ.க அரசு உரிய தாக்குதலுக்காக துல்லிய தாக்குதலையும், புல்வாமா தாக்குதலுக்காக பாலகோட் வான் தாக்குதலையும் நடத்தியது. இவ்வாறு இரு விதமான அரசியலை இந்த நாடு கண்டுள்ளதெனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் பா.ஜ.க தேச பக்திக்காகவும் காங்கிரஸ் ஓட்டு பக்திக்காகவும் செயற்படுகின்றதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.