யாக்கியதன் பின்னரான காலப் பகுதியில், சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் குறைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேறும் போதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனத்தைச் செலுத்தும் சாரதிகளினால் ஏற்படக் கூடிய விபத்துக்கள் குறித்து பொலிஸார் தீவிர கண்காணிப்பு செய்து வருகின்றனர். இதனடிப்படையிலேயே அவர்கள் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் காலப் பகுதியில் போதையில் வாகனத்தைச் செலுத்திய சாரதிகள் தொடர்பிலான எண்ணிக்கையில் பாரியளவில் மாற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், போதையில் வாகனத்தைச் செலுத்துவோர் தொடர்பிலான கைதுகளில் பெரியளவு அதிகரிப்பு எதுவும் பதிவாகவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கஞ்சா போதைப் பொருள் பயன்பாடு சட்ட ரீதியானது என்ற சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஆறு மாத காலம் பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.