க் எதிர்கொள்ளவிருக்கும் வெள்ளத்திற்கு உதவுவதற்காக, கனேடிய படையினர் முன்வந்துள்ளனர்.
அனைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் அவசரமாக உதவ முன்வருமாறு கனேடிய படையினரிடம், கியூபெக் பொது பாதுகாப்பு அமைச்சர் ஜெனீவிவ் கில்பல்ட் கோரிக்கையொன்றினை முன்வைத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட மத்திய பொது பாதுகாப்பு அமைச்சர் ரால்ப் குட்லே கியூபெக்கிற்கு உதவ ஒப்புக்கொண்டார்.
இதற்மைய தற்போது அவர்களுக்கு உதவ முன்வந்துள்ள கனேடிய படையினர், வெள்ளத்தை தடுப்பதற்கான அணைகளை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தென் கியூபெக் சில பகுதிகளில், இன்று கனமழை பெய்யும் என்பதால் தண்ணீரின் அளவு உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு 2017ஆம் ஆண்டில் காணப்படும் நிலைகளை விட அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைகள் மற்றும் பொருட்களை வழங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் ஜெனீவிவ் கில்பல்ட் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சிறிய குடியிருப்புகளை சேர்ந்த சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.