அப்புத்தளை தோட்டத்தைச் சேர்ந்த திருமணமாகாத விஷ்வநந்தன் கோகிலநாதன் (28 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அப்புத்தளை தோட்டத்திலிருந்து லிந்துலை பாமஸ்டன் தோட்டத்தில் அமைந்துள்ள தனது உறவினர் வீட்டிற்கு, நேற்று (சனிக்கிழமை) விருந்துபசாரம் ஒன்றுக்கு சென்றபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த இளைஞனுடன் 3 உறவினர்களும் நீராட சென்றதாகவும், நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் அகப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனை ஏனையவர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்காத நிலையில் அந்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து நேற்று மாலை லிந்துலை பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து குறித்த இளைஞனின் சடலத்தை ஆற்றிலிருந்து கண்டெடுத்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதோடு, பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.