இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டினை அதிகரிக்க வலியுறுத்தியும், ஒன்ராறியோ சட்டமன்று முன்பாக திரண்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அங்கு கண்டன ஆர்ப்பாட்ட கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்தனர்.
இந்த ஆண்டிலேயே 1,558 ஆசியரியர்களை பணிநீக்கம் செய்யவும், அடுத்துவரும் நான்கு ஆண்டுகளுக்குள் 3,457 முழு நேர ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யவும் திட்டமிட்டு்ளளமைக்கான சமிக்கையினை டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி அரசாங்கம் வெளியிட்டு்ளளது.
இந்த பணி நீக்கத்தின் மூலம் எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் 851மில்லியன் டொலர்களை மீதப்படுத்தவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
எனினும் இந்த நடவடிக்கையானது ஆசிரியர்களையும் மாணவர்களையும் பெரிதும் பாதிக்கும் என்பதனை வலியுறுத்தியே, ஒன்ராறியோ அரசாங்க பாடசாலை ஆசிரியர்களின் ஐந்து தொழிற்சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துளளன.
மாநில அரசாங்கத்தின் கல்வித்துறை மீதான இவ்வாறான நடவடிக்கைகளைக் கண்டித்து, ஒன்ராறியோவின் 600க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் வெளிநடப்பு போராட்த்தினை முன்னெடுத்து மறுநாள், ஆசிரியர்களும் இந்தப் போராட்டத்தின மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.