ண்டு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் மூன்று இளைஞர்களை கைதுசெய்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தொலைபேசிகள், சிம் அட்டைகள், அரபு மொழியில் எழுதப்பட்ட புத்தகங்கள், கையேடுகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இயேசு கிறிஸ்துவின் புனித தினமான ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தொடர் தற்கொலைக்குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளடன் 500இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதலுக்கு ஜ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றிருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.