ஜொடி வில்சன்-ரேபொல்ட் மற்றும் ஜேன் பில்போட் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் ட்ரூடோ தனது கட்சியிலிருந்து நீக்கினார்.
இந்நிலையில் இது தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ஒரு முறைகேட்டை அம்பலப்படுத்தி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கியதன் மூலம் ட்ரூடோ, நீதிக்கு துரோகம் இழைத்துவிட்டார்.
இந்நிலையில், அவர்கள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற விசாரணை ஆரம்பிக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.