கன்னியாகுமாரி மாவட்டம் சுசீந்திரத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ”பணத்தை குவித்து வைத்து விநியோகம் செய்பவர்களை தடுத்தால் அதனை தோல்வி பயம் என்று கூறுவது முறையல்ல. பணப்பட்டுவாடா சர்வசாதாரணமாக நடைபெற்று வருகின்றது. இதை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரின் நிறுவனங்கள் மூலம் பணம் விநியோகிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கிறன.
இந்நிலையில் இது தொடர்பான முறையான நடிவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்