பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு தேர்தலில் சீட் வழங்காதது குறித்து தேர்தல் பிரசார கூட்டமொன்றில் ராகுல் விமர்சித்திருந்தார். அதற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் ராகுலின் செயற்பாட்டுக்கு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கண்டனம் தெரிவித்து, காணொளியொன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது அக்காணொளி மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியுள்ளதாவது,
“தேர்தல் பிரசார கூட்டங்களில் கண்ணியமாக பேசுவதற் ராகுலுக்கு தெரிவதில்லை. அதனை முதலில் அவர் பழக வேண்டும்.
மேலும் அவரின் கண்ணியமற்ற பேச்சு அக்கட்சியின் அவலநிலையை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. அந்தவகையில் காங்கிரஸ் தரம் தாழ்ந்த அரசியல் நடவடிக்கையிலேயே தற்போது ஈடுபட்டு வருகின்றது.
அரசியலில் கண்ணியமாக நடந்து கொள்வது குறித்து அத்வானி கூறிய அறிவுரையை ராகுல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அத்துடன் அரசியலில் ஆதாயம் தேடுவதை விடுத்து, நாட்டு நலன் பற்றி சிந்திக்க வேண்டும்” என அக்காணொளியில் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.