செவ்வாய்க்கிழமை) பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருக்கின்றார். இந்நிலையில் அவரது பிறந்த தினத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த வாழ்த்து கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, “தங்களது மகிழ்ச்சிகரமான பிறந்த நாளில் உங்களுக்கு எனது பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நீங்கள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவை புரிய நல்ல உடல் நலத்துடனும், அமைதியுடனும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என எடப்பாடி பழனிசாமி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த வாழ்த்துச் செய்திக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நன்றி தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.