மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் காலை முதல் இந்த மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து தற்போது பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் குறித்தும் தீவிர சோதனைகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில், கொழும்பின் வெள்ளவத்தை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் இன்று மோட்டார் சைக்கிள்கள் சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்தமையைத் தொடர்ந்து அவை வெடிவைக்கப்பட்டு சோதைனையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது