இருந்ததோ அதே போன்று மீண்டும் முன்னிலை பெறவேண்டும் என வட. மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் சிவநேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “மாணவர்களின் கல்வி இன்று மிகவும் மோசமாக பின்னடைந்துள்ளது. மாணவர்கள் பாடசாலை கல்விக்கு அப்பால் மாலை நேர கல்வியை நோக்கி ஓடுகின்றனர். பரீட்சைகளில் தோற்றி சாதித்த மாணவர்களிடம் உங்கள் வெற்றிக்கு என்ன காரணம் என கேட்டபோது, பாடசாலை கல்வி மாத்திரமே என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்கள் தமது கல்வியை கற்று, யுத்த காலத்தில் வடக்கு மாகாணம் எவ்வாறு கல்வியில் முன்னிலையில் இருந்ததோ அதே போன்று முன்னுக்கு வரவேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.