முதலாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் சென்டர் வீதி மற்றும் வில்லியம்ஸ் பார்க்வே பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.06 மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து இரவு 8.11 அளவில் கியூரன்டோரியோ வீதி மற்றும் சான்ட்வூட் பார்க்வே பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு சம்பவங்களும் ஒரு சில நிமிடங்கள் வித்தியாசத்தில் இடம்பெற்றுள்ள போதிலும், இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் இடம்பெற்ற பகுதிகள் சுமார் நான்கு கிலோமீட்டர் இடைவெளியில் உள்ளது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் போதும் எவரும் காயமடைந்ததாக முறைப்பாடு இல்லை என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறான நிலையில் இந்த இரண்டு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவா என்பது தொடர்பாக தாம் ஆராய்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் அதிகாரிகள், இந்தச் சம்பவங்கள் தொடர்பில் ஏதாவது தகவல் தெரிந்தால் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்