ஐ கொமினிட்டி அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகள் மற்றும் பொது அமைப்புகளின் பங்களிப்புடன் இந்த சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த சிரமதான நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் உட்பட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஐ கொமினிட்டி அமைப்பின் பிரதிதிகள், இளைஞர் யுவதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கடற்கரைப் பகுதிகளில் பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பாவனையினை குறைக்கும் வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இன்று கடல்வாழ் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறிவரும் பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பாவனையினை கட்டுப்படுத்துவதற்கு இளைஞர் யுவதிகளை ஊக்கப்படுத்தும் வகையிலேயே இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக ஐ கொமினிட்டி அமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான செல்வி வேணுகா ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
கடற்கரையில் பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பாவனையினை கட்டுப்படுத்துவதற்கு இளைஞர் யுவதிகள் தம்மால் முடிந்தவற்றை செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான நிகழ்வுகளுக்கு மாவட்டத்தில் உள்ள அவைரும் ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் எனவும் இவ்வாறான நிகழ்வுகளை பாராட்டுவதாகவும் இங்கு கருத்து தெரிவித்த மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.