ஆனால், மக்களுக்காக செயற்படுத்தக் கூடிய திட்டங்களையே தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. முன்வைத்துள்ளது என அவர் தெரிவித்தார்.
தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாவட்டம், மேச்சேரியில் வேட்பாளர் அன்புமணி ராமதாஸை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், “தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றும் விதமாக, தேர்தல் அறிக்கை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இந்த தேர்தல் அறிக்கையில் செய்ய முடியாததை செய்வதாகக் கூறி திட்டமிட்டு பொய்களைக் கூறி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியும் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.
யாருக்கும் 72 ஆயிரம் ரூபாய் வழங்க முடியாத திட்டத்தைக் கூறி, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார். இந்த திட்டத்துக்கு 3.5 இலட்சம் கோடி செலவாகும். இதனை எவ்வாறு செயற்படுத்த முடியும்.
நாம் எது நடக்குமோ அதை மட்டுமே சொல்கிறோம். நடக்காததை, செயற்படுத்த முடியாததை திட்டங்களைக் கூறி தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் மக்களிடம் பிரசாரம் செய்கின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.