பேண்தகு பாடசாலை
அபிவிருத்தி தேசிய நிகழ்ச்சி திட்டத்தின்
கீழ் கற்றல் முறைமைக்கு பொருந்தும் வகையில் பாடசாலைத் தோட்டம் மற்றும்
சூழலை கட்டி எழுப்பல் தொடர்பில் நஞ்சற்ற உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன
இதற்கு அமைய
மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளில் இந்த பேண்தகு பாடசாலை அபிவிருத்தி தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் உணவுற்பத்தி தேசிய
வேலைத்திட்டத்தினுடாக பாடசாலைகளில் காணப்படும் குறைந்த பயன்பாட்டினை கொண்ட
நிலத்தினை விவசாய ரீதியில் சுற்றாடல் நேயமிக்கதாக அபிவிருத்தி செய்யும் விவசாய
உற்பத்தி அலகுகளை பாடசாலையினுடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன .
இதன்கீழ்
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மட்டக்களப்பு புனித திரேசா மகளிர் வித்தியாலயத்தில் உணவு
உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தினுடாக ஆரம்ப பயிர் நடுகை நிகழ்வு இன்று (05) பாடசாலை அதிபர் திருமதி .மாலதி பேரின்பராஜா .தலைமையில் நடைபெற்றது .
ஆரம்ப பயிர்
நடுகை நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை
வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் கே .ரகுகரன்
, சிறப்பு அதிதியாக விவசாய சேவைக்கால ஆலோசகர் பி .செல்வநாயகம் , பாடசாலை
இணைப்பாளரும் சேவைக்கால ஆலோசகருமான திருமதி வை .இந்திரகுமாரன் பாடசாலை ஆசிரியர்கள்
,மாணவர்கள் கலந்துகொண்டனர்