முடியாது என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.
திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் தம்மிடம் தொடர்பில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் ஸ்ரீராம்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், தேர்தல் முடிவுகள் வெளியானதும், மேற்குவங்கத்தில் தாமரை மலரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அப்போது திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மம்தா பானர்ஜியை விட்டு விலகி விடுவார்கள் என்றும், தற்போது கூட, அக்கட்சியை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் தம்மிடம் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மம்தாவுக்கு டெல்லி வெகுதூரம் இருக்கிறது எனவும், இதன் காரணமாக அவரது பிரதமர் கனவு பலிக்காது என்றும் விமர்சித்தார். தேர்தல் தொடங்கியபோது தம்மை விமர்சித்து வந்த எதிர்க்கட்சிகள் தற்போது, முடிவுகள் நெருங்கும் சமயத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை விமர்சிக்கத் தொடங்கிவிட்டதாகவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
பிரதமர் மோடியின் பேச்சு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், எம்.பியுமான டெரெக் ஓ பிரையன், பாஜகவுக்கு அந்திம காலம் நெருங்கிவிட்டது என்று கூறினார்.
மேலும், திரிணமுல் கட்சியை சேர்ந்த ஒரு கவுன்சிலர் கூட, பாஜகவில் இணையமாட்டார் எனத் தெரிவித்தார். பிரதமர் தேர்தல் பரப்புரை நடத்த வந்தாரா? அல்லது குதிரை பேரம் நடத்தி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க வந்தாரா? எனத் தெரியவில்லை எனவும், ஆட்சி அமைக்க பிரதமர் குதிரை பேரம் நடத்த முயல்வதாக தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு வழங்கப் போவதாகவும் டெரெக் ஓ பிரையன் எச்சரித்துள்ளார்.