மட்டக்களப்பு மாவட்ட சென்ட் ஜோன்ஸ் அம்புலன்ஸ் படை அணியினரினால் மரக்கன்றுகள் நாட்டும்
நிகழ்வுகள் (01) மட்டக்களப்பில்
முன்னெடுக்கப்பட்டது
சென்ட் ஜோன்ஸ் அம்புலன்ஸ் படை மட்டக்களப்பு மாவட்டத்தில்
ஆரம்பிக்கப்பட்டு இருபது வருட நிறைவினை
முன்னிட்டு மாவட்ட சென்ட்
ஜோன்ஸ் அம்புலன்ஸ் படை அணியினரினால் சுற்று சூழலை பாதுகாக்கும் வகையிலும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் மரக்கன்றுகள் நாட்டும் திட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்றன
.
மட்டக்களப்பு மாவட்ட சென்ட் ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையின் மாவட்ட ஆணையாளர் சபா சுந்தரராஜா ஆலோசனைக்கு அமைய மட்டக்களப்பு கல்வி
வலயத்தில் பாடசாலைகள் மட்டத்தில்
மரக்கன்றுகள் நாட்டும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
இதற்கு அமைய மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும்
மட்டக்களப்பு மகாஜன கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அதிபர்கள் தலைமையில் மரக்கன்றுகள்
நாட்டும் நிகழ்வுகள் பாடசாலைகளில் நடைபெற்றது
நடைபெற்ற மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வில் மாவட்ட சென்ட் ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையினர் ,
பாடசாலைகளின் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்