க்க முயற்சி செய்கிறார் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அவர் தெரிவிக்கையில், “பிரதமர் மோடி, நிரவ் மோடி, அனில் அம்பானி போன்ற தன்னுடைய நண்பர்களுக்காக ஒரு இந்தியாவையும் ஏழை விவசாயிகளுக்காக ஒரு இந்தியாவையும் உருவாக்க மோடி முயற்சி செய்கிறார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் ரஃபேல் ஊழல் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளும். பிரதமர் மோடி மற்றும் குற்றஞ்செய்த பிறர் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
ஏழைகளுக்கு வருடம் ரூ.72 ஆயிரம் கொடுக்கும் நியாய் திட்டத்திற்கான பணம் அனில் அம்பானி, நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி, விஜய் மல்லையா போன்றோரின் பையில் இருந்து எடுக்கப்படும்.
விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி போன்ற திருடர்களுக்காக நான் பயப்படவில்லை. பிரதமர் மோடி வேண்டுமென்றால் பயப்படலாம்” என அவர் கூறியுள்ளார்.