மன்னாரில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் பேருவலை போன்ற பிரதேசங்களில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் மீண்டும் யாழ், மன்னார் மாவட்டங்களில் மீள் குடியேற வேண்டுமென தெரிவித்தார்.
இதற்கான வளங்களை ஐக்கிய தேசிய கட்சி வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்
மேலும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, கல்வி வளர்ச்சிக்காக அரசாங்கம் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். அந்த நிதியினூடாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.