அவ்வகையில், மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் கள ஆய்வு செய்யப்பட்டது. தமிழகம் மற்றும் புதுவையில் 21 ஆயிரத்து 464 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டசபைத் தொகுதிகளிலும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை பண்பாடு மக்கள் தொடர்பக ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டார்.
இந்த கருத்து கணிப்பின் முடிவுகளின்படி, மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை.
அவர் முதலமைச்சராக வரவேண்டுமென வெறும் 7 சதவீதம் பேரே ஆதரவு தெரிவித்துள்ளனர். சீமானை 5 சதவீதம் பேரும், ரஜினியை 4 சதவீதம் பேரும், அன்புமணி ராமதாசை 2 சதவீதம் பேரும் ஆதரித்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் அரசியல் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு 60 சதவீதம் பேர் வாய்ப்பு இல்லை என்றும், 29 சதவீதம் பேர் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்களிப்போம் என்று 3.59 சதவீதம் பேர் கூறியுள்ளனர். நோட்டாவுக்கு வாக்களிப்போம் என்று 4 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
எனினும், தமிழ்நாட்டு பிரச்சினைகளை கமல்ஹாசன் திறமையாக தீர்ப்பார் என்று 9 சதவீதம் பேர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.