தியுள்ளது.
இது குறித்து சுதந்திர ஊடக இயக்கம் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,
“ஒரு கலை படைப்பாளியும் எழுத்தாளருமான ஷக்திக சத்குமாரவினால் எழுதப்பட்ட சிறுகதை ஒன்று முகப்புத்தில் பிரசுரமானதைத் தொடர்ந்து, அக்கதை பௌத்த தர்மத்தை அவமதிப்பதாக உள்ளது என்ற குற்றச்சாட்டின் பேரில் எழுத்தாளர் சத்குமார கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவரை ஏப்ரல் 9ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்திருக்கும் நடவடிக்கையானது மிகவும் அதிருப்தியளிப்பதாக உள்ளது.
சுதந்திர ஊடக இயக்கத்துக்கு கிடைத்துள்ள தகவலின் படி ஷக்திக சத்குமார பொல்கஹவெல பொலிஸாரினால் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசனத்தின் அடிப்டையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசனத்தில் (SJC) கையெழுத்திட்டதன் மூலம் இலங்கை சர்வதேசத்துக்கும் இலங்கை மக்களுக்கும் அளித்த வாக்குறுதி, கருத்து சுதந்திரம் இந்த சாசனத்தின் மூலம் மென்மேலும் பலப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் என்பதாகும்.
ஆனால் குறிப்பிட்ட இந்த சம்பவத்தின் மூலம் கருத்து வெளியிடும் உரிமையை இந்த சாசனம் சவாலுக்கு உட்படுத்தியுள்ளது என்பதை தெளிவுபடுத்துகின்றது.
ஒரு கலைப் படைப்பின் உள்ளடக்கம் பற்றி ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினால் அது தொடர்பாக முடிவு செய்வதற்கு ஒரு கண்ணோட்டத்தில் இருந்து மட்டுமே அதனை நோக்க முடியாது. எனினும் குறிப்பிட்ட இந்த விடயத்தில் அரசாங்கம் அதை கருத்திற்கொள்ளாமலேயே செயற்பட்டுள்ளது என்பது தெளிவாகும்.
கலை இலக்கிய படைப்புக்கள் மற்றும் சுதந்திர சிந்தனையாளர்களின் ஆக்கங்கள் தொடர்பாக அரசாங்கம் ஆய்வுகளற்ற முறையில் முடிவெடுத்துள்ளது என்பதையும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை அரசாங்கம் தொடர்ச்சியாக மீறுகிறது என்பதையும் சுதந்திர ஊடக இயக்கம் பல முந்தைய சந்தர்ப்பங்களிலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தன்னிச்சையான நடவடிக்கை எடுப்பதை இனியும் தொடர வேண்டாம் என்று அனைத்து அரச அதிகாரிகளையும் சுதந்திர ஊடக இயக்கம் மீண்டும் கேட்டுக்கொள்கிறது.