சுதந்திரக் கட்சி மறுப்பு தெரிவித்து வருவதால் தாமரைமொட்டு கட்சிக்கும் சுதந்திர கட்சிக்கும் இடையிலான ஒரு கூட்டணியை அமைப்பதில் தடை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை இரு கட்சிகளும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித இணக்கப்பாடுமின்றி முடிவடைந்தது. இதனால் இரு கட்சி தரப்பிரனருக்கும் இடையில் பரந்துபட்ட கூட்டணி அமைப்பதில் வெவ்வேறு கருத்துக்களும் நிலைப்பாடுகளும் கொண்டுள்ளமை உறுப்பினர்களின் சமீபத்தைய கருத்துகளில் தெரியவந்தது.
இந்நிலையில் ஐ.தே.கவை எதிர்ப்பதற்கு சுதந்திர கட்சியின் தொடர்ச்சியான தோல்வி, கடும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக தாமரைமொட்டு கட்சியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஸ்ரீ.ல.பொ.பெ. இடையேயான ஒரு கூட்டணியின் நிலைப்பாடு ஐக்கிய தேசிய முன்னணிக்கு எதிரான வலுவான எதிர்ப்பு ஒன்றை அமைப்பதாகும் என்றும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்களிப்பில் இருந்து விலகிய பின்னர், ஸ்ரீ.ல.சு.க. குழு தமது முடிவை தவறு என ஏற்றுக்கொண்டது.
இருப்பினும் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்களிப்பில் இருந்து சுதந்திர கட்சி விலகியிருந்தது என சுட்டிக்காட்டிய அவர் யூ.என்.பி.க்கு எதிரான அவர்களின் உண்மையான அணுகுமுறை என்ன? எனவும் கேள்வியெழுப்பினார்.
இந்த நடத்தைகள் காரணமாக கட்சி ஆதரவாளர்களுக்கு கூட்டணியில் நம்பிக்கை இழந்துள்ளதாகவும் அதன் நோக்கம் கேள்விக்குள்ளாக்கியதாகவும் அவர் கூறினார்.
மேலும் ஸ்ரீ.ல.சு.க.யின் செயல்கள் இரு கட்சியாலும் முன்மொழியப்பட்ட கூட்டணி நம்பிக்கை இழந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மே மாதம் அமையவுள்ள ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான புதிய கூட்டணியில் சுதந்திர கட்சியின் 15 உறுப்பினர்கள் இணைந்துகொள்வார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.