மட்டக்களப்பு மாநகர
சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள நான்கு வருட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் (01) மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனையில் நடைபெற்றது
மட்டக்களப்பு மாநகர
சபை பொதுமக்களின் பங்கேற்றளுடன் முன்னெடுக்கப்படவுள்ள நான்கு வருட அபிவிருத்தி
திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள்
வட்டார ரீதியாக முன்னெடுத்து வருகின்றது
மட்டக்களப்பு மாநகர சபை
முதல்வரின் தலைமையின் கீழ் 20 வட்டார மக்களின் பம்களிப்புடன் வட்டாரங்களில் மக்களின்
தேவைகளை அறிந்து தேவைப்படுகின்ற பொது பண்பாட்டு சேவைகளான பஸ்தரிப்பிடம் ,ஆட்டோ தரிப்பிடம் ,பொது
சந்தை, ,பொதுகட்டிடம், தாய்சேய்
பராமரிப்பு ,நூலகம் ,பாளர் பாடசாலை , பொது குடி நீர் வசதி , சுத்திகரிப்பு சேவை
,விளையாட்டு மைதானம் ,பூங்கா , மயானம் ,வியாபார நிலையம் மற்றும் உள்ளூராட்சி
மன்றம் தவிர்ந்த ஏனைய சேவைகளான வைத்தியசாலை ,பாடசாலை , தொழில் வாய்ப்பு
,சுற்றுலா துறை ஆகியவற்றின் அவசியம் மற்றும் அதன் அபிவிருத்தி தொடர்பான
கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுகின்றன
இதற்கு அமைய மட்டக்களப்பு 14
ஆம் வட்டாரம் உறுப்பினர் டி .ஸ்ரீஸ்கந்தராஜா ஒழுங்கமைப்பில் 14 ஆம் வட்டாரம் நொச்சிமுனை பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி
திட்டங்கள தொடர்பாக 14 ஆம்
வட்டார ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் ,
கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் பங்களிப்ப்டன் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது
மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல்
நிகழ்வில் .மாநகர பிரதி முதல்வர் கே
.சத்தியசீலன் , பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் , மாநகர சபை நிர்வாக உறுப்பினர்கள்
கலந்துகொண்டனர்