ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் ஏப்ரல் 20 ஆம் திகதிவரையிலான 10 நாட்களிலேயே அதிக வாகன விபத்துக்கள் பதிவாவது புள்ளிவிபரங்களில் இருந்து உறுதியாகியுள்ள நிலையில் அதனை தடுக்க இந்த சிறப்புத் திட்டங்கள் அமுல் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அதன்படி இம்முறை போக்குவரத்து கடமைகளுக்காக மட்டும் 8000 போக்குவரத்து பொலிசார் கடமையில் ஈடுபடுத்தபப்டவுள்ளதாகவும், அவர்களில் சிவில் உடைகளில் பல பொலிஸார் தேர்ந்தெடுக்கும் பேருந்து வண்டிகளில் பயணம் செய்வர் எனவும் அவர் கூறினார்.
அத்துடன் குடிபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைதுசெய்ய முன்னெடுக்கப்படும் சிறப்புத் திட்டங்கள் அதிகரிக்கப்படவுள்ளதால் கையிருப்புக்கு மேலதிகமாக குடி போதையை பரிசீலனைச் செய்ய பயன்படும் 25 ஆயிரம் பலூன்களை இன்றைய தினம் இறக்குமதி செய்ததாகவும், அவை நாளை நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படம் எனவும் அவர் சுட்டிக்கடடினார்.