குறித்த தேவாலயத்தில் நேற்றைய தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற திருவிழாவில், பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பக்தர்கள் மத்தியில் ஊடுருவிய திருடர்கள் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டனர். இதில் மூன்று சங்கிலிகள் அறுக்கப்பட்டன.
இந்நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், தேவாலயத்திற்கு அருகில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த ஹயஸ் ரக வாகனத்தை மறித்து, அதனுள் இருந்தவர்களை சோதனையிட்டனர். இதன்போது அவர்களிடமிருந்து இரண்டு சங்கிலிகள் மீட்கப்பட்டன.
குறித்த இரு சங்கிலியும் தேவாலயத்தில் பக்தர்களிடமிருந்து அறுக்கப்பட்ட சங்கிலி என்பதனை பொலிஸார் அடையாளம் கண்டு கொண்டதனை அடுத்து வாகனத்தில் இருந்த மூன்று பெண்கள் உட்பட ஐவரை பொலிஸார் கைது செய்ததுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சந்தேகநபர்கள் ஐவரும், நீர் கொழும்பு பகுதியை சேர்த்தவர்களென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.