செய்தாலும் அதனூடாக இலங்கையில் அரசியல் தீர்மானங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்காலத்தில் வரும் ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட எந்தவொரு தேர்தலுக்கும் நாம் தயாராகவே உள்ளோம்.
ஜனாதிபதித் தேர்தல் குறித்து கதைப்பவர்கள் மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டுள்ளனர். அவர்கள் அந்த தேர்தலை நடத்த அஞ்சுகின்றனர். எனவே முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
இலங்கையில் வழக்குகளை தாக்கல் செய்வதன் ஊடாக எந்த அனுகூலமும் கிடைக்காது என்ற நிலையில் அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வெளிநாடுகளில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதன் ஊடாக இந்த நாட்டு அரசியல் தீர்மானங்களை மாற்றுவதற்கு முடியாது.
காரணம் இந்த நாட்டு மக்களே நாடு குறித்த தீர்மானங்களை எடுப்பர். எனவே திறந்த மனதுடன் சிந்தித்து சர்வதேச சூழ்ச்சிகளுக்கு அஞ்சாமல் சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.