கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி நடத்தப்பட்ட வான்தாக்குதலைத் தொடர்ந்து மேற்கு பகுதி விமானங்களுக்கான தனது வான் வழித்தடத்தை பாகிஸ்தான் முழுவதுமாக மூடியது.
இதனால் டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு விமானங்கள் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டிருந்ததுடன், பல விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், மேற்கு பகுதியில் உள்ள 11 வான் வழித்தடங்களில் ஒரு வழித்தடம் திறந்துவிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தற்போது உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.