இனங்காணப்பட்ட புத்தாக்க சிந்தனை உடைய மருதமுனை அல்மதீனா வித்தியாலய ஸ்தாபக அதிபரும்,கவிஞருமான ஏ.ஆர.;நிஃமத்துல்லாவின் எதிர்பாராத மறைவு மருதமுனை கல்விச் சமூகத்தில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளது.
கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் தலைவர் பேராசிரியர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன்,ஊடக இணைப்பாளர் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எப்.எம்.எஸ்.அஹமதுல் அன்ஸார் மௌலானா ஆகியோர் இணைந்து இந்த அனுதாபச் செய்தியை வெளியிட்டுள்ளனர்.
இந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது :-சுனாமிக்குப் பின்னர் புதிதிதாக ஸ்தாபிக்கப்பட்ட அல்மதீனா வித்தியாலயத்தின் ஸ்தாபக அதிபராக இருந்து பத்த வருடங்கள் இப்பாடசாலையின் பாடவிதானம்,இணைப்பாடவிதானம்,பௌதீக வள அபிவிருத்தி என்பன வற்றில அதீத அக்கறை கொண்டு இப்பாடசாலையை கட்டியெழுப்பிய பெருமை இவரையே சாரும்
.
இப்பாடசாலைக் கீதம்,விளையாட்டுக் கீதம்,இலட்சினை,கொடி,சுற்று மதில் என்பனவற்றை சிறப்பான முறையில் வடிவமைத்து க.பொ.த.சாதாரண தரம் வரை மதீனாவை தரமுயர்த்திக் கொண்டு சென்றமை மருதமுனை வரலாற்றில் பொன் எழுத்துக்ளால் பொறிக்கப்பட வேண்டிய அம்சங்களாகும்.
விஷேட காலைக் கூட்டங்களில் சர்வதேச தினங்களை நினைவுபடுத்தி அதற்குப் பொருத்தமான வளவாளர்களை பேச்சாளர்களாக அழைத்து மாணவர்களுக்கு பயன்படும் நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கு செய்த பெருந்தகையாவார்.உலக கவிதை தினம் என்ற கருப்பொருளைக் கண்டறிந்து பாடசாலையில் அதற்கான சிறப்பு நிகழ்ச்சியை செய்து காட்டிய புத்தாக்குணர் இவர்.
இவரது பிரிவால் துயருறும் இவரது குடும்ப உறவினர்களுக்கு கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது என இந்த அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளது.
(பி.எம்.எம்.ஏ.காதர்)