‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் YouTube இல் புதியசாதனை படைத்துள்ளது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100ஆவது திரபை்படமான மெர்சல்’ படத்திற்கு இரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலுக்கு சமூக வலைதளங்களில் பாரிய வரவேற்பு கிடைத்து வருகின்றது.
YouTube இல் இதுவரை இந்த பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை தாண்டிவருகின்றது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விவேக் வரிகளில் கைலாஷ் கெர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா இந்த பாடலை பாடியுள்ளனர். தமிழையும், தமிழர்களின் பெருமையையும் சொல்லும் வரிகளில் இந்த பாடல் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
இத்திரைப்படத்தில் விஜய் மூன்று தோற்றங்களில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.