இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக அவர்கள் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மாத்திரமல்ல அவர்களின் உறவினர்களும், நாங்களும் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே அவர்களை பொதுமன்னிப்பின் கீழ் அல்லது புனர்வாழ்வளித்து விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.