எட்மன்டன் பொலிஸாரை மேற்கோள்காட்சி அந்நாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
எட்மன்டனின் புறநகர் பகுதிகளில் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
18 முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வந்தாலும், கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
எனினும் எட்மன்டனின் புறநகர்ப் பகுதிகளில் விசேடசுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.